கிரிக்கெட் கூத்துகள்
தென்னாபிரிக்காவில் இந்திய அணி தழுவிய 2 தோல்விகளைத் தொடர்ந்து அரங்கேறியுள்ள கூத்துகளை பார்க்கலாம்.
1. BCCI-யின் தலைவரான பவார், தேர்வுக் குழுவின் தலைவரான வெங்க்சார்க்கரை தென்னாபிரிக்காவுக்கு விரைந்து சென்று, இந்திய மக்களின் அதிருப்தியையும், மன வருத்தத்தையும் தெரிவிக்குமாறு கூறியுள்ளார். இதை தொலைபேசியிலேயே சொல்லி விடலாம் என்ற விஷயத்தை அமைச்சரிடம் யாரும் தெரிவிக்கவில்லை போலிருக்கிறது :)
2. BCCI-யின் உப தலைவரான சஷாங்க் மனோகர், இரண்டாவது போட்டியில் இந்திய அணி ஆடிய விதத்தை பார்க்கும்போது, வீரர்களுக்கு ஒரு பைசா தரக் கூடாது என்றும், கிரிக்கெட் வாரியத்தை குற்றம் சொல்வது தவறு என்றும் காரசாரமாகப் பேசியுள்ளார் ! performance-க்கு ஏற்றபடி ஊதியம் வழங்குவது, கிரிக்கெட் வீரர்கள் பொறுப்பாக விளையாட வழி வகுக்கும் என்றும் கூறியுள்ளார்.
3. லோக் சபாவில் எம்.பி க்கள் எகிறி எகிறி குதித்ததைப் பற்றி சென்ற பதிவில் எழுதியிருந்தேன் ! அதற்கு, தைரியமாக இருவர் எதிர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சஷாங்க் மனோகர், "கிரிக்கெட் தொடர்புடைய விஷயங்கள் குறித்துப் பேசுவதைத் தவிர்த்து, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேறு எந்த வேலையும் இல்லை போலிருக்கிறது" என்றும், கிரெக் சாப்பல், "நான் ஆச்சரியப்படவில்லை ! இம்மாதிரி என்னை குறை கூறுவதற்குத் தான் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது" என்றும் இரண்டு போடாக போட்டார்கள் ! அவைத்தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, "எம்.பி க்களின் பணி என்ன என்று யாரும் எங்களுக்கு லெக்சர் தர வேண்டிய அவசியமில்லை" என்று கூறினார். கடுப்பான நமது மேதகு உறுப்பினர்கள், சாப்பல் மீது உரிமை மீறல் தீர்மானம் கூட கொண்டு வர முடியும் என்று பயம் காட்டியுள்ளார்கள். ஒன்று புரியவில்லை. இவர்கள் சாப்பலைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் இவர்களை யாரும் விமர்சிக்கக் கூடாது ! நாட்டை கட்டிக் காப்பவர்களிடமே சகிப்புத் தன்மை இல்லையென்றால், எப்படி பாமர மக்களிடம் எதிர்பார்க்க முடியும் ? அவர்கள் தொடப்பம், செருப்பு, முட்டை ஆகியவற்றை நாடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை ;-)
4. கல்கத்தா ரசிக வெறியர்கள், கிரெக் சாப்பலின் உருவ பொம்மையை எரித்தும், சவுரவ் கங்குலியை அணியில் சேர்க்க வேண்டும்மென்று கோஷம் எழுப்பியும் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர் ! இதில் வியப்பொன்றும் இல்லை எனலாம் ! அலகாபாத்தில் உள்ள மகமத் கை·பின் இல்லம் தாக்கப்பட்டுள்ளது. சந்தடி சாக்கில், கம்யூனிஸ்ட்கள் சவுரவ் கங்குலியை அணியில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி குளிர் காய்ந்துள்ளனர். அவர்கள் குணம் தெரிந்தது தானே :)
5. கேப்டன் டிராவிட் காயமடைந்து, நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகளில் ஆட இயலாத சூழலில், VVS லஷ்மண் தென்னாபிரிக்கா செல்ல இருக்கிறார். ஒரு மாதத்திற்கு முன்பு வெங்க்சார்க்கர், லஷ்மணை ஒரு நாள் போட்டிகளுக்கான அணியில் சேர்க்காததற்கு, அவர் Fitness (இல்லாமல் இருப்பது) தான் காரணம் என்று கூறியது ஏனோ நினைவுக்கு வந்து தொலைக்கிறது ;)))
இந்த கூத்துகளுக்கு நடுவில், சரத் பவாரும் டிராவிட்டும் நடந்து கொள்ளும் விதம் பாராட்டத் தக்கது. பவார், கிரெக் சாப்பலை நீக்குவதோ, அணியின் செயல்பாட்டில் தலையிடுவதோ சாத்தியமில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். அமைதியின் சொரூபமான நமது கேப்டன் டிராவிட், "என் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றி நான் கவலைப்பட இயலாது (அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் அணி வீரர்களே சொதப்புகிறார்கள் என்பது வேறு விஷயம்:)) யாரையும், கிரிக்கெட் பற்றி பேசாமல் இருக்கும்படி நான் கூற முடியாது. விமர்சிப்பதற்கு அவர்களுக்கு உரிமை இருப்பது போலவே, அதற்கு பதில் கூறாமல் இருக்க எனக்கும் உரிமையுள்ளது" என்று மெச்சூரிட்டி தெறிக்கப் பேசியுள்ளார் !!!
As Groucho Marx once said, "He may talk like an idiot. He may look like an idiot. But, don't let that fool you. He really is an idiot !"
நான் இங்கு டிராவிட்டைப் பற்றிப் பேசவில்லை, என்னைப் பற்றியும் அல்ல :)
எ.அ.பாலா
*** 263 ***
20 மறுமொழிகள்:
As usual, my comment will be the first comment :)
எது அப்படி இருந்தாலும் ,சேப்பல் தேவையில்லாமல் அணிக்குள் அரசியல் பண்ணுகிறார். அதனால் அவரை அடக்கி வைத்தால் இந்தியா உருப்படும்.
சரி! ரெண்டாவதா நான் போடுறேன்!
நாடோடி,
'நன்றி'
நாமக்கல் சிபி,
'நன்றி'
//சரி! ரெண்டாவதா நான் போடுறேன்!
//
No. You are THIRD only, like in 'thenkoodu' contest :)))
//You are THIRD only, like in 'thenkoodu' contest //
Correct!
:))
ஆஹா! மூணு நம்பர் நல்லா வொர்க் அவுட் ஆகுதே!
//As usual, my comment will be the first comment//
நான் வேணா ஒரு 25 பேரை அனுப்பட்டுமா?
ஹூம்..என்னத்த சொல்றது!!
தோற்கலாம் ஆனால் இப்படியல்ல. இப்படி தொடர்ந்தல்ல.
:(
ஹூம்.. என்னத சொல்ல!!
தோற்கலாம்.. ஆனால் இப்படியல்ல... இப்படி தொடர்ந்தல்ல...
ஹூம்.. என்னத சொல்ல!!
தோற்கலாம்.. ஆனால் இப்படியல்ல... இப்படி தொடர்ந்தல்ல...
இங்கே என் மனக்குமுறல்:
http://lodukku.blogspot.com/2006/11/blog-post_28.html
பாலா,
இவங்க அடிக்கிற கூத்தில் கொஞ்சம் விருப்பம் உள்ள கிரிக்கெட் பிரியர்கள் கூட வெறுத்து போய் ஒதுங்க போறாங்க, எப்படியோ நாட்டுக்கு நல்லது நடந்தா சரி.
ஆமா, இது முன்னாடி என்னமோ தென்னாப்பிரிக்கா செல்லும் போது எல்லாம் அவங்களை அனைத்து போட்டியிலும் வென்றது போலவும், இந்த முறை தான் தோற்பது போலவும் தோற்றம் உருவாக்கும் மடையர்களை என்ன சொல்வது என்று தெரியலை.
பேசாம இந்திய கிரிக்கெட் போர்ட், நன்றாக ஆடும் வெளிநாட்டு ஆட்டக்காரர்களை சம்பளம் கொடுத்து நம்ம பெயரில் விளையாட விடலாம்.
இங்கே லொடுக்குப் பாண்டியின் நப்பாசை பிரித்து மேயப் படுகிறது
இந்திய அணியின் தொடர் தோல்விகளின் பின்னணியில் சிம்பு-நயன்தாரா பிரிவு. திடுக்கிடும் உண்மைகள்!
//
பரஞ்சோதி said...
ஆமா, இது முன்னாடி என்னமோ தென்னாப்பிரிக்கா செல்லும் போது எல்லாம் அவங்களை அனைத்து போட்டியிலும் வென்றது போலவும், இந்த முறை தான் தோற்பது போலவும் தோற்றம் உருவாக்கும் மடையர்களை என்ன சொல்வது என்று தெரியலை.
//
Correct point !!! Thanks for the visit.
//ஆவி அண்ணாச்சி said...
இங்கே லொடுக்குப் பாண்டியின் நப்பாசை பிரித்து மேயப் படுகிறது
//
Will read and get back :)))
//நாமக்கல் சிபி @15516963 said...
ஆஹா! மூணு நம்பர் நல்லா வொர்க் அவுட் ஆகுதே!
//
:)))) Thanks !
//
இங்கே என் மனக்குமுறல்:
http://lodukku.blogspot.com/2006/11/blog-post_28.html
//
lodukku Sir, I read your posting and commented !!!
//ஆட்கள் சப்ளை செய்பவர் said...
நான் வேணா ஒரு 25 பேரை அனுப்பட்டுமா?
//
Pl. send as early as possible ;-))))
அனுமதிக்கு நன்றி!
//சேப்பல் தேவையில்லாமல் அணிக்குள் அரசியல் பண்ணுகிறார்//
சேப்பல் மட்டும் இல்லையென்றால் 2007ல் இந்தியாவிற்கு உலகக் கோப்பை உறுதி! நான் கேப்டனாக இருந்தால்!
நாங்கள் என்றாவது பாராளுமன்ற நடவடிக்கைகள்/விவாதங்கள் குறித்து பேசி இருக்கிறோமா?
அவரவர் வேலைகளை அவரவர்கள் பார்க்க வேண்டியதுதானே!
கிரிக்கெட் மைதானத்தில் இருந்து கொண்டு அமைச்சர்களின் ஊழல் பற்றி பேசினால் நன்றாகவா இருக்கும்!
//performance-க்கு ஏற்றபடி ஊதியம் வழங்குவது, கிரிக்கெட் வீரர்கள் பொறுப்பாக விளையாட வழி வகுக்கும் //
இது அநியாயம்! வீரர்களுக்கான சம்பளத்தையும் நாங்களே கொடுக்கும் படியாகிவிடும் அவலநிலை ஏற்படும் என்று கவலையாக உள்ளது!
///
இவங்க அடிக்கிற கூத்தில் கொஞ்சம் விருப்பம் உள்ள கிரிக்கெட் பிரியர்கள் கூட வெறுத்து போய் ஒதுங்க போறாங்க, எப்படியோ நாட்டுக்கு நல்லது நடந்தா சரி.
///
நிறைய குத்துக்கள்(உள் எல்லாம் இல்ல நேரடி குத்து) இருக்கும் பதிவு ஆனா இருக்கறதுலேயே சூப்பர் குத்து இதுதான்.
ஆட்கள் சப்ளை செய்பவர்,
'நன்றி' 'நன்றி' 'நன்றி'
செந்தில் குமரன்,
'நன்றி'
எனக்குத் தெரிந்தவரை ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து 5 ஆட்டங்கள் தோற்றதுமில்லை, தொடர்ந்து 5 ஆட்டங்கள் வென்றதுமில்லை. ஏதாவது ஒரு வெற்றி அல்லது தோல்வி மீண்டும் பழையபடி அதே வட்டம்.
முன்பொரு காலத்தில் (சச்சின்)மட்டுமே ஆடினால் வெற்றி இல்லையென்றால் கண்டிப்பாகத் தோல்விதான் என்ற நிலையிருந்தது. சமீபத்தில் அந்த நிலை மாறி யாராவது (யாரேனும்) ஒருவர் மட்டும் நன்றாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்தார்கள். ஆனால் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிடுமோ என்று தோன்றுகிறது.
டெஸ்ட் போட்டிகளைப் பொருத்தவரையில் கும்ப்ளேவின் உதவியால் பலபோட்டிகளை வென்றிருக்கிறது. டிராவிட் மற்றும் சச்சின் பெரும்பான்மை போட்டிகளில் தோல்வியைத் தவிர்க்க (கவனிக்க: வெற்றிபெற அல்ல) உதவியுள்ளார்.
-அபுல்
Post a Comment